உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று (27.03.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தபால் மூல வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் திகதிகள்
1.மாவட்ட செயலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை, விசேட பொலிஸ் பிரிவுகள் ஆகியவற்றில் கடமையாற்றுபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
2.முப்படை முகாம்கள் மற்றும் அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










