அடுத்த பெரும்போகத்தில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பெரசூட் தட்டுக்களை விவசாயிகளுக்கு 25 வீத நிவாரணத்தில் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
2024 பெரும்போகத்தில் சுமார் 4000 விவசாயிக்கு 25 வீத நிவாரணத்தின் அடிப்படையில் பெரசூட் தட்டுக்களை வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நாற்றுகளை நடுவதற்கு இந்த பெரசூட் தட்டுக்கள் பயன்படுத்த முடியும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇