பாடசாலைகளுக்கு சூரிய கலங்களை பொருத்தும் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலைகளுக்கு சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கல்விப் பிரிவில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், அதிக மின்சார கட்டணத்தை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

மாதாந்தம் 20,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணத்தை பெறும் பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முன்னோடித் திட்டத்தின் மினுவாங்கொடை கல்விப் பிரிவில் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects