கனரக இயந்திர இயக்குநர் பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 03.11.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுவின் ஏற்பட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும், விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், அம்கோர் தேசியத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமான ப.முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் சிவக்குமார் ஆகியோரும், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்.ஜதீஸ்குமார், அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான கூட்டுத்தாபனத்தின் பிரதம பொறியிலாளர் பிரகலாதன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் தயாபரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் தஜீவரன், பொறியியலாளர்கள், பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர்கள், அம்கோர் உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதனூடாக வேழலவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில், அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மாவட்ட செயலகம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டத்தாபனம் ஆகியன இணைந்து இப்பயிற்சி மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்த்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்னும் 100 இளைஞர்களிற்கு இது போன்ற கனரக வாகன இயக்குநர்களுக்கான பயிற்சி வழங்கப்பட வாய்புள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளினால் சிறப்புரைகளும் ஆற்றப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…
2 Responses
Super Super
Weldone Muraly and team. Good job. keep it up.