வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமாக இருப்பதால், இக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல்கள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அக் கடல் பகுதிகளுக்கு அருகில் படகில் செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு திணைக்களம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. 

சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக கடல் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகள் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு மற்றும் காலி வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects