பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அமைக்கப்படும் தானசாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து அவதானம் செலுத்துமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் நிலைகள் மாசுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே, தானசாலைகளில் வழங்குவதற்கான உணவுகளைத் தயாரிப்பதற்கு முன்னதாக, அதற்காகப் பயன்படுத்தப்படும் நீரின் தன்மை குறித்து அவதானம் செலுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










