மட்டக்களப்பில் இடம் பெற்ற விவசாய கண்காட்சி 2025!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற விவசாய கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.திசநாயக்க கலந்து கொண்டார்.

சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் 04.06.2025 அன்று இடம் பெற்ற கண்காட்சி நிகழ்வில் நவீன தொழில் நுட்பத்துடன் காலநிலைக்கு சாதகமான பாதுகாப்பு கூடாரத்தில் பயிர்ச் செய்கைத் தொகுதி, நகர்ப்புற மாடித்தோட்ட பயிர்ச் செய்கை தொகுதி, மரக்கறி, இலைமரக்கறி, கிழங்குப் பயிர்கள், மூலிகைத் தாவரங்கள், பந்தல் பயிர்ச் செய்கை தொகுதி, பண்ணை பெண்கள் விரிவாக்கல் தொகுதி, காளான் செய்கை மற்றும் தேனீ வளர்ப்புத் தொகுதி, நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் – பத்தலகொட, கிழக்கு பல்கலைக் கழகம், பண்ணை இயந்திரமயமாக்கல் பிரிவு மகா இலுபள்ளம மற்றும் பல நிறுவனங்களது காட்சிக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், தெங்கு, பனை அபிவிருத்திச் சபைகள், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் மற்றும் பல திணைக்களங்களதும், தனியார் நிறுவனங்களதும் காட்சி கூடாரங்கள் அமைக்கப்பட்டது.

இக்கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பார் எம்.ஏஃ.ஏ சனீர், அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects