மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும், பல்வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி கதிரேசப்பிள்ளை மேகநாதனினால் காகித நகல் எடுக்கும் இயந்திரம் (Photo Copy Machine) ஒன்று 05-06-2025 அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கல்லூரியின் மிக முக்கிய தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட இவ் இயந்திரம் காலை ஒன்றுகூடல் நிகழ்வில் பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அண்மையில் வெளிவந்த 2023(2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இவரது மகன் மேகநாதன் பிரணீத் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 170 ஆவது இடத்தினையும் பெற்று மெரிட் அடிப்படையில் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கல்லூரிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










