புகையிராத கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட புகையிரத கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்ட போது தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.
அதற்கு பதிலளித்த புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, இதன்போது கருத்து தெரிவித்புகையிரதத் திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண, 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.
அப் புகையிரதப் பெட்டிகள் அனைத்தும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டவை என கே.கே. ஹேவாவிதாரண தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










