பொசன் பூரணையை முன்னிட்டு இன்று (09.06.2025) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 புகையிரத சேவைகளும் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










