இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொசன் தானங்களில் கலந்துகொள்ளல் மற்றும் பொசன் தானங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இம் மாதம் 7 ஆம் திகதி முதல் நாளை (10.06.2025) வரை பொசன் பௌர்ணமி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7,021 பொசன் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் , பொசன் தானம் வழங்க விரும்புபவர்கள் முதலில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு , பொசன் தானங்களை சோதனை செய்யும் பணிகளில் சுமார் 2500 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகளவிலான பொசன் தானங்கள் அநுராதபுரம்,பொலன்னறுவை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அநுராதபுரம் நகரத்தில் இதுவரை 193 பொசன் தானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் பொசன் தானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects