கண்டி மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவை இயக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை தண்டவாளம் தாழிறங்கிய இடத்ததை ஆய்வு செய்வதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு அங்கு சென்றுள்ளது.
இத் தாழிறக்கம் காரணமாக பேராதனை மற்றும் கண்டிக்கு இடையிலான புகையிரத சேவைகளை தற்காலிகமாக நிறுத்த புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புகையிரத தண்டவாளத்திலேயே இத் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










