ஜேர்மன் நாட்டைச் சேர்நத சர்வதேச டிவிவி நிறுவனத்தின் நிதி அனுசரணையில், அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் ஊடாக இத்திட்டம் மட்டக்களப்பு – வவுணதீவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 15 சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் யுவதிகளும் பெண்களும் ஆடை உற்பத்தித் தொழில் துறையில் ஈடுபட உள்ளார்கள்.
அதற்கிணங்க ஆடை உற்பத்தி தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார திறன் விருத்தி செயலமர்வு 02-11-2023 அன்று வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முறைசாரா வாழ்நாள் கல்வியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள இளம் பராயத்தினர் பிரயோக அறிவாற்றல் கல்வியைப் பெற்று சமூக பொருளாதார மேம்பாட்டை அடைந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இம் முறைசாரா வாழ்நாள் கல்வித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான பயிற்சிகளை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி என். லோகேஸ்வரன், வவுணதீவுப் பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உதவு அலுவலர் எல். கமலநாதன் ஆற்றல் அபிவிருத்தி அலுவலர் என். சிவநாதன் ஆகியோர் வழங்குகின்றனர்.
இத்திட்டத்தின் ஆடை உற்பத்திக்கான இளையோர் ஆற்றல் அபிவிருத்தி தொழில் வள நிலையம் வவுணதீவு சாளம்மைக்கேணியில் அமைக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள யுவதிகளுக்கும் பெண்களுக்கும் பரீட்சார்த்த செயற்திட்டக் காலத்தில் மாதாந்த உதவு ஊக்கக் கொடுப்பனவும் பயிற்சிகளும் உள்ளீடுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇