நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக, நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (13.06.2025) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபின் வரலாறு, பாராளுமன்றத்தின் வகிபாகம், “Clean Sri Lanka” வேலைத்திட்ட எண்ணக்கருவின் பெறுமதி மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலைப் பெறும் வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கியது.

மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் இலங்கை வங்கிக் கணக்குகள் ஆரம்பித்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.

இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயலத் பெரேரா, இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) காஞ்சன ஹேரத், ஆகியோருடன் நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி டீ.ஆர். டீ வானகுரு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects