மின்சார சபையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா நிதி இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக வலுசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மின்சார சபையில் நீண்டகாலம் பணியாற்றி, விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விசேட இழப்பீட்டுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்குப் பல வருடங்களாகத் தங்களின் சிறந்த சேவையை வழங்கிய ஊழியர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “பெருமைமிகு சேவை – பாதுகாப்பான முடிவு” (A Proud Service – A Safe End) என்ற கருப்பொருளின் கீழ் நாளை (15.05.2026) இதற்கான விசேட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










