கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்காக எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த விவசாயிகளுக்கு 17 ஆயிரம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் மானியமாக வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரத்தினை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் வறட்சியான காலநிலை காரணமாக 65 ஆயிரம் ஏக்கர் விவசாயக்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇