2380 இலக்கம் கொண்ட 2024.04.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தினால் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி தனித்தனியாக நடாத்தப்பட்ட மூன்று பரீட்சைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் III வது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் II வது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை ஆகிய இரண்டு தடைதாண்டல் பரீட்சைகளுக்குமான பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்படி பரீட்சைகளுக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் தமது தனிப்பட்ட பெறுபேறுகளை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் இணையத்தளத்தினூடாக (www.slida.Ik) தமது சுட்டெண் இலக்கத்தினை உள்ளிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் 1 வது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சையின் பெறுபேறுகள் மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇