அரச சேவைக்கு புதிதாக 30000 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச சேவையில் புதிதாக  30000 பேரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தெரிவித்துள்ளது .

அதன்படி, பொது நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை, அறிவியல் சேவை உள்ளிட்ட பல பணியாளர் பதவிகளுக்கு பொருத்தமான நபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

மேலும், முகாமைத்துவ  உதவியாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் உட்பட பொது சேவையில் உள்ள பல அத்தியாவசிய வெற்றிடங்களுக்கு பொருத்தமான  நபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

அனைத்து ஆட்சேர்ப்புகளும் போட்டித் தேர்வுகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects