சீனாவின் குன்மிங் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையில் புதிய சரக்கு விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எப் விமான சேவையின் போயிங் 747 – 200 சரக்கு விமானம் 26.06.2025 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இச் சரக்கு விமானம் சீனாவின் குன்மிங் நகரத்திலிருந்து 26.06.2025 அன்று காலை 10.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
22 மெட்ரிக் தொன் நிறையுடைய பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த சரக்கு விமானம் வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் குன்மிங் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையிலான குறித்த சரக்கு விமானச் சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










