மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமானது நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாயாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளப் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் 31.12.2024 அன்று வெளியிட்டு வைத்துள்ளது.

மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பளப் பட்டியலை சங்கத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டு வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 450 க்கு மேற்பட்ட வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளதாகவும், இந்த வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு வெவ்வேறு வகையான சம்பளங்கள் வழங்கப்படுவதாகவும். இதனால் வீட்டு வேலைத் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக சம்பளப் பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய 8 மணி நேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒரு மணி நேர வேலைக்கு 500 ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மணித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வோருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும், தொழில் வழங்குபவர்களால் வழங்கப்பட வேண்டும் என சம்பளப் பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனைத் துண்டுபிரசுரம் ஊடாக பொது இடங்களில் விநியோகித்துள்ளனர்.

மேலும், இச் சங்கமானது கண்டியைத் தலைமையகமாகக் கொண்டு வீட்டு வேலைத் தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல மாவட்டங்களில் இயங்கி வருகின்றது எனவும், இச் சங்கத்தில் இணையாத வீட்டுவேலை தொழிலாளர்கள் இணைந்து கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பளப் பட்டியல் துண்டுப்பிரசுரம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects