வீதி பாதுகாப்பு தொடர்பில் “பாதுகாப்புடன் செலுத்தி உயிருடன் இருப்பீர்” எனும் தொனிப்பொருளில் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.11.2025 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு Future Nexus Enterprises (Pvt) Ltd (FNE) நிறுவனத்தின் அனுசரணையில் ATI நிறுவகத்தின் பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலனின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன, வீதி விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள், வீதி விபத்துக்களில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாப்பது போன்ற பல விடயங்கள் வளவாளர்களால் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
மேலும் மாணவர்களுக்கு இது தொடர்பான குழுச்செயற்றப்பாடுகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் Future Nexus Enterprises (Pvt) Ltd நிறுவனத்தின் செயலாளர் டேவிட் கனகரத்தினம், காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அத்தியட்சகர் பிரபாகரன், Future Nexus Enterprises (Pvt) Ltd நிறுவனத்தின் மேற்கு, கிழக்கு மற்றும் மத்திக்கான பிராந்திய இயக்குனர்களான அப்துல் சாரூக், இவாஞ்சலின் டேவிட், கவிதாஞ்சலி, ஆணிவேர் உற்பத்தி நிறுனத்தின் உரிமையாளர் சுஜிக்கா ஜனகன் மற்றும் SCCO சட்டத்தரணிகளான சஃப்ரீதீன், ஜனுஜன், உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதகு ஊடகம் இச் செயலமர்விற்கு ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










