ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என அதன் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அனுர மாரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பண்ணைகளில் இருந்து 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலான விலைக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கப்படுவதால், சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇