யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்
இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேரும்,
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும்,
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும்,
தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும்,
சங்கானைப் பிரதேச செயலக பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 641 பேரும்,
காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 494 பேரும்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇