‘இலங்கையில் மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் வலுப்படுத்த ஊடகவியலாளர்களை ஈடுபடுத்தல்’ எனும் தொனிப்பொருளில், ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதான வளவாளராக சட்டத்தரணி கு.ஜங்கரன் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தியதுடன் ஊடகவியலாளர்களுக்கிடையில் கருத்து பரிமாற்றமும் இடம்பெற்றது.
மட்டு. ஊடக அமையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில், ஜக்கிய அபிவிருத்தி நிதியம் அனுசரணை வழங்கியது.
பயிற்சி கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇