கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 05.10.2023 அன்று நாட்டப்பட்து.
Islamic Relief Committee (ISRC) Sri Lanka எனும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி ஏ.நளீம்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரனும், சிறப்பு அதிதியாக ISRC Sri Lanka நிறுவனத்தின் இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமியும் ஏணைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட ஆயுர்வேத இணைப்பாளர் திருமதி ஜே.பாஸ்கரன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.முஸம்மில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வைத்திய அதிகாரி எம்.றிக்காஷ் மற்றும் எம்.நிம்சாத் ஆகியோரும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அதிக நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமையும், மேலதிக சிகிச்சைகள் மற்றும் தங்கி சிகிச்சை பெறக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(தகவல் மற்றும் படங்கள் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…