அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தொலைபேசி இலக்கமான 1977 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், ஒரு கிலோ பச்சை அரிசி 220 ரூபாவாகவும் ஒரு கிலோ சிவப்பு நாடு அரிசி 230 ரூபாவாகவும் ஒரு கிலோ கீரி சம்பா பச்சை அரிசி 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










