இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) 21.05.2026 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கன்சன பானகொடவை சந்தித்தார்.
அதன்படி, கடற்படைத் தலைமையகத்துக்குள் பிரவேசித்த இந்திய விமானப்படைத் தளபதியை, மேற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையின் சார்பில் அவருக்கு சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதன் பின்பு, கடற்படைத் தளபதி, கடற்படைத் தலைமைத் தளபதியையும் நிர்வாகக் குழுவையும் இந்திய விமானப்படைத் தளபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இராணுவ மரபுகளின்படி, நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இந்திய விமானப்படைத் தளபதியும் கடற்படைத் தளபதியும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் அடையாளமாக இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நினைவுப் பரிசும் பரிமாறப்பட்டது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










