சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவிற்கும், பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு 07.04.2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைய தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தூதுக்குழுத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திரு. சஞ்சய பந்த், பணிக்காலம் முடிந்து செல்லும் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் திரு. பீட்டர் ப்ரூயர், சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி மார்த்தா வோல்டெமைக்கேல் மற்றும் வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects