தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இம் மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும், அந்த உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










