அஸ்வெசும நலன்புரி நன்மைகளில் தேசிய அடையாள அட்டை இல்லாத பயனாளிகளை மையமாக கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை மூன்றாம் கட்டமாக புதுமண்டபத்தடியில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவினை உள்ளடக்கியதாக பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தியின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.
இதில் 63 பயனாளர்களுக்கு தேசிய அடையாள அட்டையும் அஸ்வெசும சம்பந்தமாக மற்றும் 29 பயனாளர்கள் பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான சேவையும் இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇