சீனாவின் அதிநவீன புதிய இலத்திரனியல் மோட்டார் காரான Xiaomi SU7 அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த தயாரிப்புடன் டெஸ்லா உட்பட மேற்கத்தேய கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்குமென கூறப்படுகிறது.
சீனாவின் Xiaomi SU7 என்ற புதிய இலத்திரனியல் கார், வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தோற்றம் மற்றும் செயற்திறனும் சிறந்த முறையில் உள்ளது.
மேற்குலக கார் தயாரிப்பு நிறுவனங்கள் இலத்திரனியல் கார் தயாரிப்பு சந்தையில் பங்குகளை வாங்குவதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் சீனாவும் குறித்த துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு காண்பிக்கும் அதிக ஆர்வம் துறைசார் வர்த்தகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇