புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய (15.03.2024) நிலவரம்.
நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாய் முதல் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 180 ரூபாய் முதல் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 400 ரூபாய் முதல் 500 ரூபாவரையும் இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும்
யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையும் வெள்ளை பூடு கிலோ ஒன்று 520 ரூபாய் முதல் 540 ரூபாயாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே, முட்டைக்கோஸ் தவிர்ந்த மலையக மற்றும் தாழ்நில காய்கறிகள் பலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. பொருளாதார மத்திய நிலையங்கள் பலவற்றில் போஞ்சியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்று 300 ரூபாயாக இருந்தது.
கரட்டின் மொத்த விற்பனை விலை 430 ரூபாயை விட அதிகரித்துள்ளது. லீக்ஸ் குறிப்பாக 150 ரூபாய் முதல் 250 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் நுவரெலியா முட்டைக்கோஸின் விலை கிலோ ஒன்றுக்கு 480 ரூபாய் என்ற வகையில் பதிவாகியிருந்தது.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 450 தொடக்கம் 480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇