2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள் விநியோகிக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற 10,096 பாடசாலைகளுக்கும் , 822 பிரிவெனாக்களுக்கும் பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4,640,086 மாணவர்களுக்கு சீருடைத் துணிகள் வழங்கப்பட்டதுடன், இதற்கு மொத்தமாக அவசியமான 12 மில்லியன் மீட்டர் துணி சீன அரசின் நன்கொடையாக கிடைக்கப்பெற்றது.
தற்போதளவில் அனைத்து பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டு அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் பணிகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










