சிறைச்சாலை திணைக்களமும் மட்டக்களப்பு சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளிடையே நடாத்திய சித்திரப்போட்டி, விவாதப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி என்பவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 26-06-2025 அன்று நடைபெற்றது.
சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் வழி நடத்தலிலும், சங்கத் தலைவர் P. சடாட்சரராஜா தலைமையிலும், சிறைச்சசாலை பிரதான ஜெயிலர் P.T.L.W நாணயக்காரவின் நெறிப்படுத்தலுடன் “போதைப்பொருளற்ற அழகான வாழ்க்கை” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், சங்க உறுப்பினர்களும், சிறைச்சாலை புணர்வாழ்வு உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










