பேருந்து கட்டணத்தில் திருத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இம் மாதம் 4 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 0.55% ஆல் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக் ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டாலும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கு அமைவாக எரிபொருள் விலை அவதானிக்கப்பட்ட பின்னர் புதிய பேருந்து கட்டண திருத்தம் 0.55% ஆல் குறைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் இப் புதிய பேருந்து கட்டணம் அமுலுக்கு வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects