அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (04.07.2025) நாடளாவிய நீதியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் உள்ள 311 அரச நிறுவனங்களில் சிரமதானம் மற்றும் அலுவலக மீள் புனரமைப்பு பணிகள் “ஊழிய செயற்பாடு” எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
அதன் அடிப்படையில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்ழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்திலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்ழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் கே.அருள்சிவம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக பல்கலைக்கழக கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் செயற்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்ததுடன், நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப்.ரிப்கா மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசந்தி விக்டர் நிக்ஸன் ஆகியோரும் கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட வந்தாறுமூலை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் உள்ள VTA நிலையங்களில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










