மட்டக்களப்பு சிறைச்சாலையில் சித்திரைப் புத்தாண்டு கலாசார நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கமும், சிறைச்சாலை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு கலாசார நிகழ்வானது சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் அசித்த குணதிலகவின் வழிகாட்டலிலும், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜாவின் தலைமையிலும் 19.04.2026 அன்று சிறைச்சாலை வளாகத்தினுள் நடைபெற்றது.

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகளான பொம்மைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், ஊசியில் நூல் கோர்த்தல், மாவுக்குள் காசு எடுத்தல் போன்றவையும் சிறிது மாற்றம் செய்யப்பட்ட வகையில் தலையணைச் சமர், பணிஸ் உண்ணுதல், போத்தலில் நீர் நிறைத்தல் உட்பட பல்வேறு வினோத விளையாட்டுகள் நடாத்தப்பட்டு அவற்றிற்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சங்கீத கதிரை, தொப்பி மாற்றுதல் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகரின் பாரியாரும், பிரதம ஜெயிலர் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க அங்கத்தவர்கள், ஆண் – பெண் கைதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கான நிதியானது சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க அங்கத்தவர்களின் பங்களிப்பு மூலம் பெறப்பட்டது என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects