நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் 55 புதிய விடுதிகளை அமைக்கும் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பல்கலைக்கழகங்களின் விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக 55 புதிய விடுதித்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உயர் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் எதிர்கொள்ளும் தங்குமிடப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணவும், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் அவர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தவும் இத்திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக (3 Phases) முன்னெடுக்கப்படும் இந்த பாரிய திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக 16,000 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற விபரங்கள் பின்வருமாறு:

1. கிழக்கு பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 05 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 03 ‘மாதிரி A’ (Model A) விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ (Model B) விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 1,600 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான கட்டுமான விலைமனுக்கள் கடந்த 2026 ஏப்ரல் 30 அன்று திறக்கப்பட்டதுடன், பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 02 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: 01 ‘மாதிரி A’ விடுதி (400 மாணவர்கள்) மற்றும் 01 ‘மாதிரி B’ விடுதி (200 மாணவர்கள்).

மொத்த கொள்ளளவு: 600 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான கட்டுமான டெண்டர்கள் கடந்த 2026 ஏப்ரல் 02 அன்று திறக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பல்கலைக்கழகம் தற்போது பரிசீலித்து வருகிறது.

3. சப்ரகமுவ பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 07 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 04 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 03 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 2,200 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான கட்டுமான டெண்டர்கள் கடந்த 2026 மே 20 அன்று திறக்கப்பட்டுள்ளன.

4. தென்கிழக்கு பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 06 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 04 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 2,000 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான கட்டுமான டெண்டர்கள் கடந்த 2026 மே 21 அன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 04 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 1,200 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான டெண்டர் மற்றும் சட்ட ஆவணங்களை (Tender and Legal Documents) தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

6. ரஜரட்ட பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 07 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 04 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 03 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 2,200 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதித் திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விலைமனு கோரல் (Call for quotations) கடந்த 2026 மே 21 அன்று திறக்கப்பட்டது.

7. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 06 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 03 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 03 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 1,800 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதித் திட்டத்திற்காக கட்டுமான நிறுவனங்களுடன் ஆரம்பக்கட்ட ஆலோசனைக் கூட்டம் (Pre-bid meeting) நடத்தப்பட்டு, கடந்த 2026 மே 22 அன்று விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

8. வவுனியா பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 04 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 1,200 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதித் திட்டத்திற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கை (Technical Evaluation Report) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

9. மொரட்டுவ பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 02 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள் மாத்திரம்.

மொத்த கொள்ளளவு: 400 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதித் திட்டத்திற்கான விலைமனுக்கள் கடந்த 2026 மே 17 அன்று திறக்கப்பட்டுள்ளன.

10. வயம்ப பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 04 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 400 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி A’ விடுதிகள் மற்றும் தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 1,200 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதித் திட்டத்திற்கான டெண்டர் ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

11. ருஹுணு பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 04 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 04 ‘மாதிரி B’ விடுதிகள் மாத்திரம்.

மொத்த கொள்ளளவு: 800 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதிக்கான கட்டுமானப் பணிகள் வேலைத் தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 75 சதவீதமான நிலம் தயாரிப்பு பணிகள் (Land preparation) தற்போது நிறைவடைந்துள்ளன.

12. திருகோணமலை வளாகம்

மொத்த திட்டங்கள்: 02 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 400 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ‘வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்’ (Design-and-build) அடிப்படையில் ஒரு விடுதியை அமைப்பதற்கான விலைமனுக்கள் கடந்த 2026 ஏப்ரல் 9 முதல் மே 27 வரையான காலப்பகுதிக்குள் கோரப்பட்டிருந்தன.

13. கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம்

மொத்த திட்டங்கள்: 02 புதிய விடுதிகள்.

விடுதி வகைகள்: தலா 200 மாணவர்கள் தங்கக்கூடிய 02 ‘மாதிரி B’ விடுதிகள்.

மொத்த கொள்ளளவு: 400 மாணவர்கள்.

தற்போதைய நிலை: ஒரு விடுதி கட்டுமானத்திற்கான நிலத்தைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வரும் அதேவேளை, அதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான முறைமைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி கற்கும் சுமார் 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் உயர்ந்த தரத்திலான பாதுகாப்பான தங்குமிட வசதிகளைப் பெறவுள்ளனர்.

மாணவர் நலனை முன்னிறுத்திய இத்திட்டம், உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects