நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள புகையிரத ஊழியர்கள்!

நாளை (17.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16.09.2026) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய, இரவு 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம், இரவு 8.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் மற்றும் இரவு 9.30 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் இரவு அஞ்சல் புகையிரதம் உள்ளிட்ட சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

எவ்வாறாயினும், குறித்த புகையிரதப் பயணங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்பில் புகையிரதத் திணைக்களமோ அல்லது போக்குவரத்து அதிகாரிகளோ இதுவரை எவ்வித உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects