நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவுறுத்தவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய அடுத்த மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்ற அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் கோப் உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களும் கலைக்கப்படும்.
9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வு எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மாத்திரம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇