2025 வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் மொத்த செலவினங்களும் நிகர கடன்களும் 2179 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,619.2 பில்லியன் ரூபாயாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதார குறிகாட்டியிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 2025 இல் முடிவடைந்த ஐந்து மாதங்களில், அரச வருமானம் மற்றும் மானியங்கள் 1,942.4 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன.
அத்தோடு, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,619.2 பில்லியன் ரூபாயாக இருந்தது.
மேலும் மே 2025 இல் முடிவடைந்த ஐந்து மாதங்களில், ஒட்டுமொத்த பாதீட்டுப் பற்றாக்குறை 236.6 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 366.8 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










