மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4ம் காலாண்டு மரநடுகை திட்டத்திற்கேற்ப மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் பிரதேச செயலாளர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கமைய சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தரினால் மரநடுகை வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் குடும்பநல நிலையங்களுக்கு இயற்கையின் மொழி அமைப்பினூடாக டாக்டர் காந்தா நிரஞ்சன் அவர்களின் நிதி அனுசரணையில் 75 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.இயற்கையின் மொழி அமைப்பினர், குடும்பநல உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇