மட்டக்களப்பில் உலக உணவுத் திட்டத்தின் நோக்குநிலை நிகழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போஷாக்கான உணவு வழங்கல் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் உலக உணவுத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் “வீட்டில் வளர்க்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கான உணவூட்டல்” (Home Grown School Food Feeding Programme) நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பிரிவின் ஒருங்கிணைப்பில் அமுல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான நோக்குநிலை நிகழ்ச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் 07.11.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், உலக உணவுத் திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தயானந்த திட்டம் மற்றும் அதன் வகைகள், வரவு செலவு திட்டம், நிதி ஒதுக்கீடு, பயிற்சிகள் என்பன தொடர்பான நோக்குநிலையைத் தெளிவுபடுத்தியதோடு,

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்நாயக்க, பிரதித்திட்டமிடல் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜதீஸ் குமார், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல்,வலயக்கல்வி, பிராந்திய சுகாதார சேவைகள், விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects