மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி ச.கோணேஸ்வரனின் ஏற்பாட்டில் இன்று (23.07.2025) புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஜே.எப் நிறுவனம், கனடிய நிதி உதவியுடன் பாரி அறக்கட்டளை உள்ளிட்டோரின் அனுசரணையுடன் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் 8959 மாற்றுத் திறனாளிகள் காணப்படுவதுடன் இவர்களில் 5 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட பல்வேறு வகையான அங்கவீனமுற்றவர்களாக 2691 நபர்கள் காணப்படுகின்றனர்.
மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் எம்.ஜே.எப் நிறுவன நிகழ்சி திட்ட இணைப்பாளர் சபிக்கா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










