சிவனொளிபாதமலை யாத்திரையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உந்துவப் பூரணை தினத்துடன் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று 09.11.2023 இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇