நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13 ம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் துஷான் சமீர அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்தார்..
இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇