கல்குடா அஸ்பெக் அகடமி மற்றும் மூதூர் டைட்டன்ஸ் இளையோர் அணிகளுக்கும் இடையிலான சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி கல்குடா அஸ்பெக் அகடமியின் பணிப்பாளர் ஏ. எல். எம். இர்பார் ஏற்பாட்டில் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் (25.01.2024) இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் , வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் டபிள்யூ. டி சம்பத், அஸ்பெக் அகடமி யின் பொருளாளர் இஸ்மாயில் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இப் போட்டியில் 4-1 எனும் கோல்களின் அடிப்படையில் மூதூர் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அதிதிகளினால் இப்போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…