2, 000,000 பயனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்குவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கம் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு ” என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 1,200,000 குடும்பங்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடம் அதில் 300,000 பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, பயனாளிகளுக்கு பணம் வழங்கும் செயல்முறைக்கு அப்பால், எமது முக்கிய நோக்கம் அவர்களை வலுவூட்டுவதாகும்.
அதற்காக தற்போதுள்ள பொறிமுறையை மாற்றவும் முடிவு செய்துள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇