முல்லைத்தீவு மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க விரும்பும் அனைத்து அரச, அரச சார்பற்ற அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மாவட்ட செயலகம் மூலம் தங்களின் உதவிகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட இடர் முமைத்துவ பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மாவட்ட செயலகத்தின் முன் அனுமதியின்றி நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மஞ்சுலாதேவி சதீசனை 076 211 4949 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை வழங்க முடியும்.
அத்துடன், நிர்வாக உத்தியோகத்தர் விமலேந்திரனை 077 345 9873 என்ற இலக்கத்தின் ஊடாகவும், இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரான கோகுலராஜாவை 077 395 7886 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை வழங்கு முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










