இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று (01.08.2025) முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் , தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20% ஆகவும், பாகிஸ்தானுக்கு 30% இலிருந்து 19% ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வீதம் 27% ஆகவே நீடிக்கிறது. இது மாற்றப்படவில்லை.

மேலும், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50% வரி வீதம் 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்படுகிறது. அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40% வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects